என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "திமுக ஆர்ப்பாட்டம்"
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் புகார் கொடுத்த மாணவியின் அண்ணனை மிரட்டிய வழக்கில் கைதான பார் நாகராஜ் உள்பட 4 பேரும் ஜாமீனில் வெளிவந்தனர். இது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துள்ளது.
இதைத்தொடர்ந்து இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றக் கோரி தி.மு.க. சார்பில் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடக்கிறது. தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், மகளிர் அணியினர் கலந்து கொள்கின்றனர்.
மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி கோவை அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் இன்று வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய மாணவர் சங்கம் சார்பில் கோவை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். #PollachiAssaultCase
அறந்தாங்கி:
அறந்தாங்கியை அடுத்த சுப்பிரமணியபுரத்தில் கஜா புயல் நிவாரணம் வழங்காததை கண்டித்தும், நிவாரணம் வழங்ககோரியும், தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஆலங்குடி எம்.எல்.ஏ., மெய்யநாதன் தலைமை தாங்கி பேசினார். இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட துணைச்செயலாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க வலியுறுத்தியும், பாரபட்சமாக நிவாரணம் வழங்கப்படுவதை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் அறந்தாங்கி தெற்கு ஒன்றிய பொருளாளர் சண்முகநாதன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சோமு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சியில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் குடிநீர் தேவைக்கு மேட்டூர் காவிரி நதிநீரையே நம்பியுள்ளனர். மாதத்திற்கு இரு முறை மட்டுமே குடிநீர் வினியோகிக்கப்படுவதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மேட்டூர் காவிரி குடிநீருக்கு மாதந்திர குடிநீர் கட்டணமாக ரூ.72 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், செப்டம்பர் மாதத்தில் இருந்து ரூ.152 ஆக குடிநிர் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, சொத்து வரி, தொழில்வரியும் உயர்த்தப்பட்டுள்ளது.
வாழப்பாடி பேரூராட்சியில் குடிநீர் கட்டணம் மற்றும் சொத்துவரி, தொழில்வரி உயர்த்தியதை கண்டித்தும், உயர்த்தப்பட்ட கூடுதல் கட்டணத்தை ரத்து செய்யவும், தட்டுப்பாடின்றி குடிநீர் வினியோகிக்க உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும், வாழப்பாடியில் தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வாழப்பாடி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்காடு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்ச் செல்வன் தலைமை வகித்தார். வாழப்பாடி ஒன்றிய செயலாளர் சக்கரவர்த்தி, நகர செயலாளர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிர்வாகிகள் சந்திரா ராயர், கலைசெல்வி மாதேஸ்வரன், அழகரசன், தும்பல்கணேஷ், உமாபதி, குறிச்சி பெரியசாமி, ஆட்டோ சுரேஷ், தனசேகரன், மணி மற்றும் விடுதலை சிறுத்தை ஒன்றிய செயலாளர்கள் முல்லை வாணன், வேல்முருகன் மற்றும் காலிக்குடங்களுடன் திரண்டு வந்த ஏராளமான பெண்களும் கலந்து கொண்டனர்.
வாழப்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் சூர்யமூர்த்தி, காவல் ஆய்வாளர் செல்வராஜ் தலைமையிலான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். #dmkdemonstration
குட்கா ஊழலை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சேலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தார்.
குட்கா ஊழலை கண்டித்து ஈரோடு வீரப்பன் சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான முத்துசாமி தலைமையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் “துணை போகாதே.. துணை போகாதே ஊழலுக்கு துணை போகாதே”, “கண்டிக்கிறோம்.. கண்டிக்கிறோம்.. மத்திய- மாநில அரசுகளை கண்டிக்கிறோம்”, “கைது செய்... கைது செய்.. ஊழலுக்கு துணை போன அதிகாரிகளை கைது செய்” “நடவடிக்கை எடு.. நடவடிக்கை எடு.. அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடு” போன்ற கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ், மாநில நெசவாளர் அணி செயலாளர் சச்சிதானந்தம் முன்னாள் மேயர்-குமார் முருகேஷ், முன்னாள் எம்.பி. கந்தசாமி, மாநில கொள்கை பரப்பு இணை செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சந்திரகுமார், ஈரோடு மாநகர செயலாளர் சுப்பிரமணி மாவட்ட பொருளாளர் பி.கே.பழனிசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் பெரியசாமி பொதுக்குழு உறுப்பினர் மயில்விழி முருகேஷ். மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கே.ஈ.பிரகாஷ் ஒன்றிய செயலாளர் குணசேகரன், மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் கோட்டை ராமு, பகுதி செயலாளர்கள் ராமச்சந்திரன், செல்வராஜ், மாவட்ட பிரதிநிதி சந்திரசேகர், தலைமை கழகப்பேச்சாளர் இளைய கோபால், கிங் பூபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் கோபி பஸ்நிலையம் அருகே ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் தலைமையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் கோபி நகர செயலாளர் நாகராஜன், ஒன்றிய செயலாளர் முருகன், டி.என்.பாளையம் சிவபாலன், நம்பியூர் செந்தில்குமார் மற்றும் முக்கிய நிர்வாகிகள் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர். #DMK #Gutkha
விழுப்புரம் வடக்கு மாவட்டம் சார்பில் திண்டிவனம் வண்டிமேடு வ.உ.சி. திடலில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது:-
மு.க.ஸ்டாலின் தலைவராக பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் ஆர்ப்பாட்டம் இது. தமிழகத்தில் ஊழல், லஞ்சம், கொள்ளை அதிகரித்துள்ளது.
கேரளாவில் மழையால் ஏற்பட்ட பாதிப்பை விட, தமிழகத்தில் ஏற்பட்ட புயல் பாதிப்பை விட அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் பேரழிவுக்கு கொண்டு சென்று இருக்கிறார்கள்.
அத்தனை துறைகளிலும் ஊழல் நடக்கிறது. நல்ல அதிகாரிகள் மாற்றப்பட்டு அவர்களை தொல்லைக்கு ஆளாக்குகிறார்கள். மக்களால் ஓட்டுப்போட்டு முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி வரவில்லை. தமிழகத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக அவர் முதல்-அமைச்சராகி உள்ளார்.
இந்த ஆட்சியில் எந்த திட்டமும் வளர்ச்சி அடையவில்லை. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை. தலைமை செயலாளர் இந்த அரசுக்கு பினாமியாக செயல்படுகிறார். நீதிமன்றத்தையும், போலீசாரையும் அவமதித்த பாரதிய ஜனதா பிரமுகர் எச்.ராஜா கைது செய்யப்படவில்லை.
சேலம்-சென்னை 8 வழிச்சாலை அமைப்பதில் முதல்-அமைச்சர் எடப்பாடி ஆர்வமாக உள்ளார். இதற்கு கமிஷன்தான் காரணம்.
இவ்வாறு அவர் பேசினார். #DMK #Kanimozhi #DMKProtest
அ.தி.மு.க. அரசின் ஊழல் மற்றும் முறைகேடுகளை கண்டித்து தி.மு.க. சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதன்படி இன்று தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் மத்திய, தெற்கு மாவட்டங்கள் சார்பில் விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்முடி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் அங்கையற்கண்ணி முன்னிலை வகித்தார். இதில் எம்.எல்.ஏ.க்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன், ராதாமணி, மத்திய மாவட்ட பொருளாளர் புகழேந்தி, விழுப்புரம் மாவட்ட தளபதி நற்பணி மன்ற தலைவர் டாக்டர் பொன்.கவுதமசிகாமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் அ.தி.மு.க. அரசின் ஊழல் மற்றும் முறைகேடுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் சரவணன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. இள.புகழேந்தி, மாவட்ட அவைத்தலைவர் தங்கராசு, மாவட்ட பொருளாளர் தனசேகரன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் நடராஜன் மற்றும் ஏராளமான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.
கடலூர் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் விருத்தாசலம் பாலக்கரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் கணேசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
இதில் சபாராஜேந்திரன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் குழந்தை தமிழரசன், முத்துகுமார், அவைத்தலைவர் நந்த கோபாலகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் பாவாடை குழந்தைசாமி, மாவட்ட மாணவரணி துணை செயலாளர்கள் வக்கீல் அருள்குமார், சிங்காரவேல் மற்றும் ஏராளமான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. அரசின் ஊழல் மற்றும் முறைகேடுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
காட்பாடியில் உள்ள பண்ணை பசுமை நுகர்வோர் கடையில் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று ஆய்வு செய்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
வேலூர் மாவட்டத்தில் பண்ணை பசுமை நுகர்வோர் விற்பனை கடைகள் 2016ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி தொடங்கப்பட்டது. இதன் மூலம் ரூ.1 கோடி 39 லட்சத்து 13 ஆயிரத்து 350-க்கு விற்பனை நடந்துள்ளது.
ரூ.5.97 லட்சம் லாபம் ஈட்டப்பட்டுள்ளது. தரமான காய்கறிகள் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கவும், வெளிமார்க்கெட்டுகளில் காய்கறி விலையை கட்டுப்படுத்துவதற்காகவே பண்ணை கடைகள் தொடங்கப்பட்டுள்ளது.
தி.மு.க.வின் சொத்துக்கள் எவ்வளவு. இவர்கள் என்ன கல்குவாரியில் கல் உடைத்து சம்பாதித்ததா? இவர்கள் இன்று நடத்திய ஆர்ப்பாட்டம் நகைச்சுவையாக உள்ளது. யார்... யாரை குற்றம் சாட்டுவது என்று பொதுமக்கள் கேலி, கிண்டல் செய்கின்றனர்.
தி.மு.க.வின் முன்னாள் மாவட்ட செயலாளர்கள், இன்னாள் மாவட்ட செயலாளர்களை ஆராய வேண்டும். அவர்களின் ஆரம்ப நிலை என்ன? இப்போது சொத்து சேர்த்தது எப்படி? அ.தி.மு.க. ஆட்சி சிறப்பாக நடக்கிறது. திட்டங்கள் சிறப்பாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #ADMK #TNMinister #SellurRaju #DMK
அ.தி.மு.க. அரசின் ஊழலை கண்டித்தும், குட்கா ஊழலில் சி.பி.ஐ. விசாரணையில் சிக்கி உள்ள போலீஸ் அதிகாரிகள், அமைச்சர் ஆகியோர் ராஜினாமா செய்ய வலியுறுத்தியும் தி.மு.க. சார்பில் மாவட்ட தலைநகரங்களில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மேற்கு மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-
தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் எங்கும் ஊழல் எதிலும் ஊழல் காணப்படுகிறது. பொதுப் பணித்துறை நெடுஞ்சாலைத் துறையில் உள்ள ஊழல்களை உயர்நீதிமன்றமே பட்டியலிடுகிறது. இதுவரை கொடுக்கப்பட்ட டெண்டர் விவரங்களை பட்டியலிட கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
குட்கா ஊழலில் அமைச்சர் விஜயபாஸ்கர், போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், வீடுகளில் சி.பி.ஐ. சோதனை நடத்தி உள்ளது. ஆனாலும் இவர்கள் பதவி விலக மறுக்கிறார்கள்.
எந்த புகாருக்கும் ஆளாகாதவர்தான் பதவி நீடிப்பில் டி.ஜி.பி.யாக இருக்க முடியும். ஆனால் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் பதவி விலகாமல் தொடர்ந்து நீடிக்கிறார்.
எனவே அவர் பதவி விலகாவிட்டால் சுப்ரீம் கோர்ட்டில் நான் வழக்கு தொடருவேன். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஊழல் செய்யும் அமைச்சர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் மு.க.தமிழரசு, முன்னாள் அமைச்சர் ரகுமான்கான், எம்.எல்.ஏ.க்கள் அண்ணா நகர் மோகன், கு.க.செல்வம், தலைமை கழக நிர்வாகி பூச்சி முருகன், வி.எஸ்.ராஜ், பகுதி செயலாளர்கள் சேப்பாக்கம் மதன்மோகன், ஏ.ஆர்.பி.எம்.காமராஜ், மா.பா.அன்புதுரை, ராமலிங்கம், கே.ஏழுமலை, ஜெ.கருணாநிதி, வேலு, அகஸ்டின்பாபு, பரமசிவம், மாணவரணி மாநில துணை செயலாளர் மோகன், பகுதி துணை செயலாளர் சேப்பாக்கம் பா.சிதம்பரம், லாகூர், கோவிந்தன், மாரி, பாபா சுரேஷ், மேட்டுக்குப்பம் கமலக்கண்ணன், முத்து ராமன், தனிகாசலம், பிரசன்னா, ராமச்சந்திரன் வடிவேலு உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கந்தன் சாவடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
இதில் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் பங்கேற்று பேசினார். அவர் கூறுகையில், எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் எங்கும் ஊழல் எதிலும் ஊழல் நடைபெறுவதாக குறிப்பிட்டார்.
தாம்பரத்தில் காஞ்சி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தா.மோ. அன்பரசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் எம்.எல்.ஏ.க்கள் தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் இ.கருணாநிதி, திண்டுக்கல் லியோனி, வைத்தியலிங்கம், தமிழ்மணி, மேடவாக்கம் ரவி, படப்பை மனோகரன், பெருங்களத்தூர் சேகர், புகழேந்தி, பம்மல் கருணாநிதி, பொழிச்சலூர் வனஜா, மாவட்ட பிரதிநிதி ரஞ்சன், செல்வகுமார், இமயவர்மன், ஜோசப் அண்ணாதுரை, ஜானகிராமன், சிவக்குமார், திருநீர்மலை ஜெயக்குமார், காமராஜ், தமிழ்மாறன் உள்பட ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் பங்கேற்று தமிழக அரசை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள்.
கட்டுமானத் தொழிலாளர் கட்சி பொன்.குமார், எஸ்.அரவிந்த் ரமேஷ் எம்.எல்.ஏ., வாகை சந்திரசேகர் எம்.எல்.ஏ., பாலவாக்கம் சோமு, வேளச்சேரி மணிமாறன், க.தனசேகரன், மகேஷ்குமார், பாலவாக்கம் த.விஸ்வநாதன், துரை.கபிலன், வாசுகிபாண்டியன், இப்ராஹிம், பி.டி.சி.செல்வராஜ், எஸ்.வி.ரவிச்சந்திரன், மதியழகன், கிருஷ்ணமூர்த்தி, துரைராஜ், குணாளன், சந்திரன், கண்ணன், மு.ராஜா, சுசேகர், பாலவாக்கம் மனோகர், சி.பிரதீப், பிரேமா, பொதுக்குழு உறுப்பினர்கள், அணிகளின் அமைப்பாளர்கள், பகுதி கழக நிர்வாகிகள், வட்ட கழக செயலாளர்கள், மாவட்டப் பிரதிநிதிகள், மாவட்ட அளவிலான அணிகளின் மாவட்ட துணை அமைப்பாளர்கள், பகுதி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், வட்ட கழக நிர்வாகிகள், சார்பு மன்றங்களின் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
தண்டையார்பேட்டை, வைத்தியநாதன் மேம்பாலம் அருகே சென்னை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாதவரம் சுதர்சனம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினார்.
இதில் கே.பி.பி.சாமி எம்.எல்.ஏ., சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், தி.மு.க. மாநில பிரசார குழு செயலாளர் சிம்லா முத்துச்சோழன், கிரிராஜன், ஆர்.டி.சேகர், வே.சுந்தர்ராஜன், ஜெபதாஸ் பாண்டியன், மருது கணேஷ், பி.டி.பாண்டிச்செல்வம், ரெயின்போ விஜயகுமார், ஏ.வி.ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சேகர்பாபு எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி தயாநிதிமாறன் சிறப்புரையாற்றினார். அவர் பேசும் போது, தமிழகத்தில் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆட்சி ஊழலில் மிதந்து கொண்டுள்ளது. குட்கா ஊழலுக்கு ஆளான அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் டி.ஜி.பி. பதவி விலக வேண்டும் அவர்கள் கொள்ளையடித்த பணம் மக்களின் வரிப்பணம். அரசு கஜானாவுக்கும், மக்களின் திட்டங்களுக்கம் வரிப்பணம் அமைச்சர்கள் ஊழல் செய்து கொள்ளையடிக்கின்றனர்.
ஆகவே தமிழகம் தலை நிமிர தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில் விரைவில் ஆட்சி மலர அனைவரும் சம்மதமேற்று பணியாற்றுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
சேகர்பாபு எம்.எல்.ஏ. பேசும்போது, ‘‘தமிழகத்தில் நடைபெறும் ஆட்சியில் அமைச்சர் மீது குட்கா வழக்கு, சட்ட ஒழுங்கை பாதுகாக்கும் டி.ஜி.பி. மீது ஊழல் வழக்கு உள்ளது. இது பற்றி முதல்-அமைச்சரிடம் புகார் செய்ய சென்றால் அவர் மீதே கோர்ட்டில் வழக்கு இருக்கிறது. துணை முதல்-அமைச்சர் மீதும் புகார் உள்ளது.
டெண்டர் விடுவதில் அமைச்சர் வேலுமணி மீது ஊழல் இப்படி எல்லா துறையிலும் ஊழல் மலிந்து விட்டது. தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைந்ததும் கட்சியில் வெற்றிடம் ஏற்பட்டு விடும் என்று சொன்னார்கள். ஆனால் தளபதி தலைமைஏற்று கட்சி வீறுநடை போட்டு செல்கிறது. விரைவில் சட்டமன்ற தேர்தலோ அல்லது பாராளுமன்ற தேர்தலோ வரும். இதில் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றி ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி ஏற்ப அனைவரும் பாடுபட வேண்டும்’’ என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் ரங்கநாதன், தாயகம் ரவி, ரவிச்சந்திரன் சங்கரி நாராயணன், சல்மா, பிரசன்னா, வக்கீல் சந்துரு, பகுதி செயலாளர்கள் ஜி.சி.எப்.முரளி, ராஜசேகர், நாகராஜன், ஜோசப் சாமுவேல், வாசு, ஜெயின், விஜயகுமார், வேலு தமிழ் வேந்தன், சாமிக்கன்னு, உதயா மாவட்ட நிர்வாகி ஏகப்பன், தேவஜவகர் ராதாகிருஷ்ணன், புனித வதி எத்திராஜன், ஆசாத் செம்மொழி ஆகியோர் கலந்து கொண்டனர். கவியரசு நன்றி கூறினார். பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். #DMK #DMKProtest
குட்கா ஊழல், சி.பி.ஐ. விசாரணையில் சிக்கிய அமைச்சர், காவல்துறை அதிகாரிகள் பதவி விலக கோரியும், தமிழக அரசை கண்டித்தும் தி.மு.க. சார்பில் இன்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்தது.
திருவள்ளூர் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திருவள்ளூர் ரெயில்வே நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஆவடி சா.மு.நாசர் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.பி. ஆ.கிருஷ்ணசாமி, இ.பரந்தாமன், ஆர்.டி.இ.ஆதிசேஷன், கே.திராவிட பக்தன், நகர செயலாளர் சி.சு.ரவிச்சந்திரன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் க.சுந்தர் தலைமையில் காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே காவாலான் கேட் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. எம்.எல்.ஏ.க்கள் எழிலரசன், ஆர்.டி.அரசு, புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., கண்டன உரையாற்றினார். இதில் நிர்வாதிகள் சன்பிராண்ட் ஆறுமுகம், சிவிஎம்.சேகரன், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் வி.எஸ்.ராமகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர்கள் சிறுவேடல் செல்வம், பிஎம்.குமார், தசரதன், அபுசாலி, அப்துல்மாலிக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்ய உயர் போலீஸ் அதிகாரிகள், அரசு ஊழியர்கள் சுமார் ரூ.40 கோடி லஞ்சம் பெற்ற விவகாரம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி இது தொடர்பாக 5 பேரை கைது செய்தனர். குட்கா விற்பனையில் நடந்துள்ள பண பரிமாற்ற மோசடிகள் பற்றி அமலாக்கத் துறையும் தனியாக விசாரணை நடத்தி வருகிறது.
மத்திய வருமான வரித்துறை ஆய்வின் மூலம் நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தங்களில் முதல்-அமைச்சரின் உறவினர்கள் சம்பந்தப்பட்டு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதுபோல துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் உறவினர்கள் வெளிநாடுகளில் பல கோடி ரூபாயை முதலீடு செய்து இருப்பதாக தி.மு.க.வினர் கூறி வருகிறார்கள்.
சமீபத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சுமார் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்து விட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியானது. இதைத் தொடர்ந்து ஊழலில் தொடர்புடையவர்கள் பதவி விலகக் கோரி தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் இன்று (18-ந்தேதி) காலை 10 மணிக்கு தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த கடந்த 8-ந்தேதி சென்னையில் நடந்த தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சேலம் கிழக்கு, மத்திய மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் குட்கா ஊழலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். மேலும் அ.தி.மு.க. அரசுக்கு எதிராகவும், குட்கா ஊழலில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய கோரியும் மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க.வினர் முழக்கங்களை எழுப்பிய படியே இருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக சேலம் கிழக்கு, மத்திய மற்றும் மேற்கு மாவட்டங்களில் இருந்து காலை முதலே ஏராளமான தொண்டர்கள் வர தொடங்கினர். நேரம் செல்ல செல்ல சேலம் கலெக்டர் அலுவலக பகுதியில் பல ஆயிரம் தொண்டர்கள் குவிந்தனர். பெரியார் பாலத்தின் இரு பகுதி மற்றும் கலெக்டர் அலுவலக பகுதிகளில் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டிருந்தனர்.
தி.மு.க தலைவராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் முதல் போராட்டம் என்பதால் தொண்டர்கள் உற்சாகத்துடன் காணப்பட்டனர். அவர்களை ஒழுங்குபடுத்த கூடுதல் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் இரா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வீரபாண்டி ஆ.ராஜா, மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
சென்னையில் 5 இடங்களில் தி.மு.க.வினர் திரண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரும்பாலான தொண்டர்கள் கையில் தி.மு.க. கொடி ஏந்தி ஊழலில் தொடர்புடையவர்கள் பதவி விலக கோரி கோஷமிட்டனர்.
தமிழ்நாடு முழுவதும் அனைத்து முக்கிய ஊர்களிலும் இன்று போராட்டம் நடத்தப்பட்டது. #MKStalin #DMK
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்